தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடுதமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு

  தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். அதில் 100 வயதிற்கு மேல் 16,306 வாக்காளர்களும் 120 வயதிற்கு மேல் 137 வாக்காளர்களும் இருக்கின்றனர் என்று பட்டியலை வெளிட்டு உள்ளார்.

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு ! 100 வயதுக்கு மேல் இவ்ளோ பேரு இருக்காங்களா !

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு :

  தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுவதர்க்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றது. அரசியல் காட்சிகள் தேர்தலுக்கு தயார் ஆகி வருகின்றது . இந்நிலையில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்ய பிரதா சாகு. இவர் இன்று தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் பணியானது நடைபெறும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் , பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய வழிமுறைகளையும் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை :

  1. மொத்தம் – 6 கோடியே 11 லட்சம்

  2. ஆண்கள் – 3 கோடி 

  3. பெண்கள் – 3 கோடி 10 லட்சம் 

  4. திருநங்கைகள் – 8,016 பேர்கள் என்று தமிழகத்தில் பெண் வாக்காளர்களே அதிகளவில் இருக்கின்றனர்.

இதில் ,

  1. 100 வயதிற்கு மேல் – 16,306 பேர்கள் 

  2. 120 வயதிற்கு மேல் – 137 வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்கள் :

  தமிழகத்தில் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , பேர்களை நீக்கம் செய்தல் மற்றும் பட்டியலில் மாற்றங்கள் செய்வது போன்ற அனைத்து செயல்முறைகளுக்கும் தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றது. அடுத்த மாதம் 4 , 6 , 18 , 19 போன்ற தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் தற்போது 17 வயதில் இருக்கும் நபர்களும் புதிய வாக்காளர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 9ம் தேதி ஆகும். தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் வெளியிடு.

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 ) ! அட ஆமாங்க உங்க ஏரியா இருக்கா பாருங்க !

பொது மக்கள் பார்வைக்கு :

  மக்கள் ஓட்டு போடும் ஒவ்வொரு வாக்கு சாவடிகளில் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். மேலும் தமிழகத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிலும் பட்டியல் வழங்கப்பட்டு இருக்கும். இவைகளை பொது மக்கள் நேரடியாக பார்வையிட்டு மாற்றங்கள் ஏதும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் :

  வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய இருப்பவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாகவோ அல்லது வாக்காளர் ஹெல்ப் லைன் என்ற மொபைல் செயலி பயன் படுத்தி இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் :

   தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியுடைய இறுதி வாக்காளர் பாட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *