தற்போது வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு மேல்முறையீடு விசாரணையில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வணங்கான் திரைப்படம் :
வணங்கான் என்ற படத்தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மேல்முறையீடு வழக்கில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் வெற்றி படங்களான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அந்த வகையில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இனைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
அத்துடன் இந்த திரைப்படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு :
இதனை தொடர்ந்து வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும்,
இதன் காரணமாக இந்த தலைப்புக்கு தடை விதிக்கக்கோரி ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வகையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் – அறிவிப்பை வெளியிட்ட GK 19 படக்குழு !
உயர்நீதிமன்றம் உத்தரவு :
இந்நிலையில் வணங்கான் என்ற படத்தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மேல்முறையீடு வழக்கில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.