வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி - ஐஆர்சிடிசி விளக்கம்!வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி - ஐஆர்சிடிசி விளக்கம்!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வேயில் தொடர்ந்து கொடுக்கப்படும் உணவில் சுத்தமாக இல்லை என்று பெரும்பாலான பயணிகள் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஷீரடியில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி

இதனைத் தொடர்ந்து, அந்த நபர் உணவின் தரம் குறித்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் எழுத்துப்பூர்வ புகார் கொடுத்துள்ளார். ஐஆர்சிடிசி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ” உங்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

இந்த சம்பவம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து உணவு அளிக்கும் சேவை வாங்கியவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி, ரயில்வே சமையலறை முழுவதும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு – திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு – என்ன நடந்தது?

இதனை தொடர்ந்து உணவில் இருந்த கரப்பான் பூச்சி உயிருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும்  ரயில்வே துறையின் இந்த அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல்வேறு  விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  vande bharat Express train

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *