உலகின் அதிகளவில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்யும் பகுதியாக இருக்கின்றது இந்தியா. இந்தியாவில் அதிகம் வழிபடும் பெண் தெய்வம் ” அம்மன் “. அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் அம்மன் கோவில்கள் உலகளவில் புகழ் பெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் அம்மன் கோவில்களில் புகழ் பெற்றதும் அற்புதங்கள் நிகழ்த்தும் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்கள்
அற்புதங்கள் செய்யும் அம்மன் கோவில் :
1. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்
2. தஞ்சாவூர் பட்டீஸ்வரம் துர்க்கை கோவில்
3. வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில்
1. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் :
1. பெயர் காரணம் :
திண்டுக்கல் மலைப்பகுதி திண்டு போல் இருப்பதால் தான் திண்டுக்கல் என்று பெயர் பெற்றது என்பது ஒரு வரலாறு. திண்டுக்கல் மலைக்கோட்டை உருவான போதே அம்மனும் அவதரித்ததால் இங்கிருக்கும் அம்மன் ” திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ” என்று அழைக்கப்படுகின்றாள்.
2. கோவில் வரலாறு :
1700ம் ஆண்டுகளில் சுப்பு சுல்தான் தான் படைவீரர்களுக்கு காவல் தெய்வமாக இம்மாரியம்மனை வழிபாட்டிற்கு என்று ஒரு பீடம் அமைத்து கொடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழகத்தின் 300 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது.
3. கோவில் சிறப்புகள் :
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கருவறையில் அம்மன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். மேலும் இக்கோவில் நடைபெறும் இருபது நாட்கள் மாசி திருவிழாவின் போது வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக பெருமாள் போல் அவதாரத்தில் காட்சி தருவார். இக்கோவிலில் இருக்கும் மூலவர் அம்மன் காளி உருவத்தில் சுயம்பு தெய்வமாக இருக்கின்றார். ஆடி மாத திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
4. நேர்த்திக்கடன் :
அம்மனிடம் கேட்ட வரங்களுக்கு நன்றியாக பக்தர்கள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழாவின் போது உருண்டு கொடுத்தல் , பூக்குழி இறங்குதல் , தீச்சட்டி எடுப்பது , பால் குடம் எடுத்தல் , முளைப்பாரி எடுத்தல் , மாவிளக்கு போடுவது போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.
எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
2. தஞ்சாவூர் பட்டீஸ்வரம் துர்க்கை கோவில் :
1. கோவில் எங்கிருக்கின்றது :
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் பகுதியின் அருகில் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முக்கிய வழிபாட்டு தெய்வமாக துர்க்கை அம்மன் இருக்கின்றாள்.
2. துர்க்கை அம்மன் சிறப்புகள் :
இக்கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக தனி சன்னதியில் அமர்ந்திருக்கின்றாள். ஆனி மாதம் முதல் வாரத்தில் நடக்கும் முத்து பந்தல் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதம் சோமவாரம் நாட்களில் 1008 சங்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
3. வழிபாட்டு நேரம் :
காலை 6 – 11 மணி வரையிலும் மாலை 4 – 8.30 மணி வரையில் கோவில் வழிபாட்டிற்கு என்று திறந்திருக்கும். அம்மனுக்கு ராகு கால நேரத்தில் செவ்வாய் , வெள்ளி , சனி , அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
3. அம்மன் செய்யும் அற்புதம் :
துர்க்கை அம்மனை ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் போது ராகு , கேது மற்றும் செவ்வாய் தோஷங்கள் நீங்குகின்றது. மேலும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4. நேர்த்திக்கடன் :
துர்க்கை அம்மன் மூலம் கிடைத்த வாரங்களுக்கு நன்றியாக எலுமிச்சை மாலை , எலுமிச்சை விளக்கு , அம்மனுக்கு புடவை வழங்கி தங்களின் நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
3. வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் :
1. கோவில் எங்கிருக்கின்றது :
வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் தேனியில் இருந்து கம்பம் செல்லும் பாதையில் வீர பாண்டி என்னும் பகுதியில் அமைந்திருக்கின்றது இக்கோவில்.
2. கோவில் வரலாறு :
மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னன் தன் உழ்வினையின் காரணமாக இரண்டு கண்களின் பார்வையை இழந்து விடுகின்றார். மன்னன் சிவனை நோக்கி பார்வை பெற வேண்டி தவம் செய்கின்றார். அப்போது சிவன் கெளமாரியம்மனை வணக்கும் படி ஆணை பிறப்பித்து உள்ளார். வீரபாண்டிய மன்னரும் கெளமாரியம்மனை வணங்கி இழந்த கண் பார்வையை மீண்டும் பெறுகின்றார். கெளமாரியம்மனை வணங்கி பார்வை பெற்றதன் நன்றியாக தற்போது இருக்கும் கோவிலை வீரபாண்டிய மன்னன் கட்டி இருக்கின்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.
3. கோவில் சிறப்புகள் :
இக்கோவிலில் இருக்கும் அம்மன் சுயம்புவாகவும் கன்னி தெய்வமாகவும் காட்சி தருகின்றார். கருப்பசாமி இப்பகுதியில் காவல் தெய்வமாக இருக்கின்றார். இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு பெற்றதாகும். திருவிழா நாட்களில் அம்மன் 24 நாட்கள் விரதம் இருக்கின்றாள்.
4. கோவிலில் நடக்கும் அற்புதங்கள் :
இக்கோவிலில் வீற்றிருக்கும் கெளமாரியம்மனை தூய உள்ளத்துடன் ஒருவர் வழிபாடு செய்யும் போது அம்மை நோய் , கண் நோய் போன்ற தீராத நோய்கள் தீரும் , குழந்தை வரம் கிடைக்கும் , திருமண பாக்கியம் மற்றும் வேலை கிடைக்கும் என்பது இக்கோவிலில் நடக்கும் அற்புதங்களாய் இருக்கின்றது.
5. நேர்த்திக்கடன் :
பிணி தீர்க்கும் வீர பாண்டி மாரியிடம் வரம் கேட்டு நிறைவேறியவர்கள் அம்மனுக்கு நன்றியாக அக்கினி சட்டி , ஆயிரம் கண் பானை சுமத்தல் , மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மை நோய் நீங்க சேற்றினை உடலில் பூசி தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
[…] தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவி… […]