சரத்குமார் மகள்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் சரத்குமார். தற்போது வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய மூத்த மகள் வரலட்சுமி பிரபல நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் சிம்புவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி திருமணம் குறித்து சூப்பர் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நேற்று திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வரலட்சுமியின் வருங்கால கணவரான தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் ஏற்கனவே கல்யாணமானவர் என்றும், அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.