மக்களவை தேர்தல்: விசிக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு - டாப் 10 வாக்குறுதிகள் இதோ!!மக்களவை தேர்தல்: விசிக கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு - டாப் 10 வாக்குறுதிகள் இதோ!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் தேதி வெளியாவதற்கு முன்பே அரசியல் கட்சியினர் மக்களின் வாக்குகளை சேகரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்களை கவரும் விதமாக பல்வேறு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்ட பட்டினம் என்ற பகுதியில்  அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான வாக்குறுதிகள் குறித்து பின்வருமாறு,

  • அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக மாற்றப்படும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்
  • வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும்.
  • இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.
  • தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது என்று குரல் எழுப்பப்படும்.
  • கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக கட்சி குரல் எழுப்பும்.
  • காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்பட கூடாது.
  • மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
  • பட்டியலின மற்றும் பழங்குடியினர்க்கு தனி வங்கி அமைக்கப்படும்.
  • உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
  • நீதிமன்றகளில்  வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.
  • இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும்.

முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.., இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *