விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சஸ்பெண்ட்:
தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. மேலும் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனன் பதவி ஏற்றார். அவர் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூன் பங்கேற்ற நிலையில் அவர் பேசும் போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறிய கருத்து திமுக கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆதவ் அர்ஜுனா சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் நிலையில், விசிக கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, தலைமை நிர்வாக குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனன் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!