அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

வீரப்பனின் மகள்

சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றி தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. காட்டுக்குள்ளே வாழ்ந்து காவல்துறையை தனது சுண்டு விரல் கூட படாமல் வாழ்ந்து வந்த அவர், சில சூழ்ச்சிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவருக்கு வித்யாராணி என்ற மகள் இருக்கிறார். தனது அம்மாவுடன் வசித்து  வரும் இவர்,. பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அவர் பெரிய பொறுப்புகளை கேட்ட போதிலும், பாஜக கட்சி செவி சாய்க்காமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் சேர விருப்பம் என தெரிவித்துள்ளார்.

அதை சீமான் ஏற்று கொண்ட நிலையில் அவரை தனது கட்சியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அதாவது வித்யாராணி தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக நிற்க போகிறாராம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) மாலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யாவில் பயங்கரம்.., கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூடு., 70 பேர் உயிரிழப்பு.., பிரதமர் மோடி கண்டனம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *