நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல்: சமீப காலமாக போக்குவரத்து துறை அதிரடி சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல்துறை, ஊடகம் மற்றும் வக்கீல் என எந்த துறையை சேர்ந்தவராயினும் இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்ட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த போதிலும் இன்னும் ஸ்டிக்கரை ரிமூவ் செய்யாமல் இருந்து வருகின்றனர். மேலும் இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வானங்களையும் சோதனையிட்டு பறிமுதல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் உத்தரவு ஜூன் 20ம் தேதி கூறப்படும் என்றும், அப்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டினால் வாகனம் பறிமுதல் – vehicles rules – tamilnadu transport department – traffic police rules – chennai high court – two wheeler bike and cars news
நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024
இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு
எதிர்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி?