TNPSC வேலைவாய்ப்பு 2023. Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் தமிழக அரசின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணி செய்வதற்கு ஏற்ற தகுதியான பணியாளர்களை தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து வருகின்றது.
TNPSC வேலைவாய்ப்பு 2023 ! Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அதன் படி தற்போது TNPSC சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து உள்ளது. TNPSC அறிவித்து உள்ள காலிப்பணியிடங்கள் என்னென்ன , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , விண்ணப்பிக்கும்முறை, கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
வாரியத்தின் பெயர் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் – TNPSCல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. முதல்வர் ( Principal )
2. உதவி பொறியாளர் ( Assistant Engineer )
3. முதுநிலை அலுவலர் ( Senior Officer )
4. மேலாளர் ( Manager ) போன்ற பணியிடங்கள் TNPSCல் காலியாக இருக்கின்றது என்று இவ்வாரியம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. முதல்வர் – 1
2. உதவி பொறியாளர் – 352
3. முதுநிலை அலுவலர் – 8
4. மேலாளர் – 8 என மொத்தம் 369 காலிப்பணியிடங்கள் TNPSCல் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்தகுதி :
1. முதல்வர் :
அரசு அங்கீகாரம் அளித்து உள்ள ஏதேனும் ஒரு பொறியியல் பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டம் அல்லது தொழில்நுட்பம் படித்து இருக்க வேண்டும்.
2. உதவி பொறியாளர் , முதுநிலை அலுவலர் , மேலாளர் :
சிவில் இன்ஜினியரிங் , விவசாயம் , விவசாய பொறியியல் , மெக்கானிக்கல் , ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் , ஜவுளி தொழில்நுட்பம் , எலக்ரிக்கல் , தொழில்துறை பொறியியல் , உற்பத்தி பொறியியல் , கட்டிடக்கலை இன்ஜினியரிங் , எலக்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் , இரசாயன பொறியியல் போன்ற துறைகளில் BE / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வயதுத்தகுதி :
18 வயது முதல் 32 வயது வரையில் இருக்கும் நபர்கள் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சம்பளம் :
1. முதல்வர் – ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700
2. உதவி பொறியாளர் – ரூ. 36,400 முதல் ரூ. 1,38,500
3. முதுநிலை அலுவலர் – ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500
4. மேலாளர் – ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
13.10.2023 முதல் 11.11 2023 வரையில் TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
TNPSC அறிவித்து உள்ள பொறியாளர் பணிக்கான விண்ணப்படிவத்தினை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. TNPSC பதிவுக்கட்டணம் ( 5 ஆண்டுகள் வரை செல்லும் ) – ரூ. 150
2. தேர்வுக்கட்டணம் – ரூ. 200 செலுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
1. எழுத்து தேர்வு
2. நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு TNPSCல் காலியாக இருக்கும் பணியிடங்களில் நியமிக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நாள் :
TNPSC வேலைவாய்ப்பு 2023 இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 06.01.2024 மற்றும் 07.01.2023 அன்று நடைபெறும்.
முக்கிய நாட்கள் :
1. விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.11.2023
2. விண்ணப்பம் திருத்தம் – 16.11.2023 முதல் 18.11.2023
3. சான்றிதழ் மீள்பதிவேற்றம் – 24.12.2023
4. எழுத்து தேர்வு – 06.01.2024 மற்றும் 07.01.2024
5. தேர்வு முடிவு – பிப்ரவரி 2024
6. சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்காணல் – மார்ச் 2024
7. கலந்தாய்வு – மார்ச் 2024