TNPSC குரூப் 7 வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நிலை I தொகுதி VII-A சார்ந்த காலிப்பணியிடங்களை அறிவித்து உள்ளது. இங்கு காலியாக இருக்கும் நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , கட்டணம் மற்றும் தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
TNPSC குரூப் 7 வேலைவாய்ப்பு 2023 ! ரூ.1,38,500 சம்பளம் ! விண்ணப்பிக்கலாம் வாங்க !
வாரியத்தின் பெயர் :
TNPSCன் இந்து சமய அறநிலையத்துறையின் நிலை I தொகுதி VII-Aல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
நிர்வாக அதிகாரி ( Executive Officer ) பணியிடங்கள் TNPSCல் காலியாக இருக்கின்றது
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
9 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
தமிழக அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கலை / அறிவியல் / வர்த்தகம் அல்லது சட்டம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 62,000 வரையில் சம்பளம் !
வயதுத்தகுதி :
30 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் TNPSC அறநிலையத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு ரூ. 37,700 முதல் ரூ.1,38,500 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
13.10.2023 முதல் 11.11.2023 வரையில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
TNPSCல் காலியாக இருக்கும் நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
1. TNPSC பதிவுக்கட்டணம் ( 5 ஆண்டுகள் வரையில் செல்லும் ) – ரூ. 150
2. தேர்வுக்கட்டணம் – ரூ.150 இணையதளத்தின் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறைகள் :
1. கணினி வழி எழுத்து தேர்வு
2. நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 13.10.2023
2. விண்ணப்பிக்க இறுதி தேதி – 11.11.2023
3. திருத்தம் செய்ய – 16.11.2023 18.11.2023
4. மீள் பதிவேற்றம் – 24.12.2023
5. தேர்வு நாள் – 06.01.2024 மற்றும் 07.01.2024
6. தேர்வு முடிவு வெளியீடு – மார்ச் 2024
7. நேர்காணல் – ஏப்ரல் 2024
முக்கிய குறிப்பு :
இந்து சமயத்தினை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.