தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் சமூக சேவகர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
எனவே இக்காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
சமூக சேவகர் ( Social Worker ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு சமூக சேவகர் பணியிடங்கள் தேனி மாவட்டத்தில் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
சமூகப்பணி , சமூகவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் இளங்கலை பட்டம் ( BA ) அரசு அனுமதித்த ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NLC வேலைவாய்ப்பு 2023 ! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் … லிங்க் இதோ !
வயதுத்தகுதி :
40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் சமூக சேவகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேனி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023.
சம்பளம் :
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக இருக்கும் சமூக சேவகர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 18,536 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
30.10.2023 முதல் 15.11.2023ம் தேதிக்குள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் சமூக சேவகர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இ.சந்தியா ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ,
தொகுதி நிலை அலுவலர் கட்டிடம் – 2 ,
ஆட்சியர் வளாகம் ,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல் மாடி ,
தேனி – 625531 ,
தமிழ்நாடு .
தேர்ந்தெடுக்கும் முறை :
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக இருக்கும் சமூக சேவகர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.