தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2023. tn mrb recruitment தமிழ்நாட்டில் இருக்கும் பொது சுகாதாரத் துறையில் செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. செவிலியர் பணிக்கு தகுதியான பணியாளர்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் நிரப்ப இருக்கின்றது. எனவே காலியாக இருக்கும் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2023 ! TN MRB Recruitment 2023 !
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் (Tamil Nadu Medical Services Recruitment Board – TN MRB )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்து உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் TN MRBல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
2,250 துணை செவிலியர் பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக இருப்பதாக வாரியம் அறிவித்து உள்ளது.
கல்வித்தகுதி :
1. பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. பல்நோக்கு சுகாதார பணிகள் , பொது சுகாதாரம் அல்லது துணை செவிலியர் பயிற்சி வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 42 வயது வரையில்
2. மாற்றுத்திறனாளிகள் – 18 முதல் 52 வயது வரையில்
3. விதவைகள் – 18 முதல் 59 வயது வரையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! DCPU Security Officer Jobs !
சம்பளம் :
ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில் துணை செவிலியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
துணை செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு 30.10.2023 வரையில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளத்தின் மூலம் TN MRBல் காலியாக இருக்கும் துணை செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
1. பொதுப்பிரிவினர் – ரூ. 600
2. SC / ST / SCA / DW / DAP(PH) – ரூ. 300 என்று இணையதளத்தின் மூலம் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பிறப்பு சான்றிதழ்
2. கல்வி சான்றிதழ் (பள்ளி , கல்லூரி)
3. தமிழ் வழி சான்றிதழ்
4. சாதி சான்றிதழ்
5. திருநங்கை என்றால் I’D கார்டு
6. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
தேர்ந்தெடுக்கும் முறை :
TN MRBல் காலியாக இருக்கும் துணை செவிலியர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மதிப்பெண்கள் வைத்து தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணல் கிடையாது.