வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !

சிறுவனுக்கு காட்சி அளித்த நாளும்,மோர் விற்ற கால் ஊனமுற்ற முடவனை நடக்க செய்த நாளும், போர்த்து கீசிய மாலுமிகள் கரை சேர்ந்த நாளும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024.

தாவீது வழிமுறைகளில் ஒருவரான யோசேப்புக்கு மனஒப்பந்தம் ஆன பெண் தான் மரியா. மரியா பிறக்கும் போதே ஜென்மபாவமில்லாமல் பிறந்தாள். மரியா திருமணத்திற்கு முன் தூய ஆவியால் கருவுற்று இயேசு பிறந்தார். இதனால் மரியா கன்னி மரியாள் என்று அழைக்கப்படுகின்றாள். அன்னையின் வியகுலங்கள் பல.அன்னையின் சிறப்புகள் சொல்லி முடியாதவை. அன்னைக்கு எழுப்பிய ஆலயங்களும் பல அவற்றில் தமிழகத்தில் உள்ளே சிறப்பு மிகுந்த ஆலயங்களில் ஒன்று தான் வேளாங்கண்ணி. வேளாங்கண்ணியின் சிறப்புகள் பின்வருமாறு,

வேளாங்கண்ணி பழைய பெயர் வேலன கண்ணி என்ற பெயர் தழுவித் தழுவி காலப்போக்கில் வேளாங்கண்ணி என்ற பெயரில் மக்களால் அழைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 13 கி மீ தொலைவில் கீழ்வேளூர் வட்டத்தில் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியாய் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைத்துள்ளது .

நாகை மாவட்டத்தில் பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் நாகை என்றாலே வேளாங்கண்ணி அன்னை திருத்தலம் தான் என்று பல உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து அன்னையை தரிசித்து, அன்னை செய்த நன்மைகளுக்கு நன்றி கூறி, வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமாய் தான் இன்றும் இருக்கின்றது.

வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாகும். அன்னை வேளாங்கண்ணியில் 3 முறை காட்சி தந்து புதுமைகள் நிகத்தியதால் அன்னையின் புகழ் பரவத் தொடங்கியது. அன்னையை நாடி வருபவர்களுக்கு உடல் உள்ளக் குறைகளை நிக்கி நன்மைகள் செய்து வருவதால் இவள் ஆரோக்கிய அன்னை என்றும் வேளாங்கண்ணி என்ற இடத்தில் கட்சி தந்ததால் வேளாங்கண்ணி அன்னை என்றும் இன்றளவும் மக்களால் அழைக்கப்படுகின்றாள்.

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

பால் கொடுக்கும் சிறுவனுக்கு காட்சி

மோர் விற்ற கால் ஊனமுற்ற சிறுவனுக்கு காட்சி அளித்தது

போர்த்துகீசிய மாலுமிகளுக்கு உதவியது.

16ம் நூற்றாண்டில் 1592 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ம் தேதி வேளாங்கண்ணியில் பணக்கார பண்ணையாருக்கு பால் கொண்டு சென்ற சிறுவன் முன் அன்னை மரியாள் அழகின் உச்சத்தில் மிளிர,கையில் குழந்தையுடன் தோன்றி தன் குழந்தைக்கு பால் தருமாறு கேட்டாள். அன்னையின் விண்ணக அழகாள் வியந்த சிறுவன் தான் கையில் இருக்கும் பாலை கொடுத்தான். பின் பண்ணையார் வீட்டிற்கு சென்று மித பாலை குடுத்தான் .பால் குறைந்ததால் பண்ண்ணயர் சிறுவனை திட்டி தீர்த்து விட்டார். சிறிது நேரத்திற்கு பின் சிறுவன் அளித்த பால் பானையில் இருந்து அதிசயமாக பால் பொங்கி வழிந்தது. இதை கண்ட பண்ணையாரும் ஊர் மக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். சிறுவன் கண்ட அன்னையை மக்களும் காண ஆர்வப்பட்டனர். அன்னை தோன்றிய இடத்தில் மக்களும் கூடி ஜெபித்து தங்கள் குறைகளை தீர்க்க வேண்டிக் கொண்டனர்.

ஊனமுற்ற மகனுக்காய் அன்றாடம் அன்னையின் வேண்டிய தாயின் விண்ணப்பத்திற்கு இணங்க சிறுவன் முன் 1637 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மீண்டும் காட்சி அளித்தால் அன்னை மரியாள் . கால் ஊனமுற்ற சிறுவன் நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக்கொண்டிருந்த வேலையில் அன்னை சிறுவன் முன் தோன்றி ”மகனே எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல் ” என்ற வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.’ அம்மா என்னால் எப்படி நடக்க முடியும்? ‘என்று சிறுவன் கேட்க ”உன்னால் முடியும்”என்றால் அன்னை. சிறுவன் எழுந்தான்,நடந்தான், ஓடினான்.அங்கு ஓடத்தொடங்கியவன் செல்வந்தர் வீட்டில் தான் போய் நின்றான். அன்னையின் புகழ் மென்மேலும் பரவத் தொடங்கியது. செல்வந்தர் அன்னை காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் எழுப்பினர்.

1671 ம்,ஆண்டு போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் பாய்மர கப்பலில் நடுக்கடலில் வீசிய புயலில் சிக்கிக்கொண்டு, செய்வதுஅறியது திக்கற்று அன்னையிடம் வேண்டினர்.’ அம்மா நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் காட்டுவோம் ‘என்று உறுதி கூறினர். பின் புயல் அடங்கி மாலுமிகள் பத்திரமாக கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி. கரை சேர்ந்த நாள் செப்டம்பர் 8. வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதக அழகிய கலை நயத்துடன் வண்ண பீங்கான் ஓடுகள் மூலம் ஆலய பீடத்தினை அலங்கரித்தனர். தாங்கள் பயணம் செய்த பாய்மரக்கப்பலின் தூணை ஆலய கொடிமரமாய் நட்டி இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டுள்ளது.

சிந்தலக்கரை ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் 2024 ! முழு விபரங்கள் !

சிறுவனுக்கு காட்சி அளித்த நாளும்,மோர் விற்ற கால் ஊனமுற்ற முடவனை நடக்க செய்த நாளும், போர்த்து கீசிய மாலுமிகள் கரை சேர்ந்த நாளும் செப்டம்பர் 8 2024 அன்னையின் பிறந்த நாளிலே. அன்னையின் திருவிழா ஒவ்வாரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் தேதி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பெரு விமர்ச்சியாக கொண்டாடப்படுகின்றது .

அன்னையிடம் அன்றாடம் வரங்கள் பெறுவது நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பது. உடல் சுகம் கிடப்பது, புது வீடு கட்டி முடிப்பது, அரசாங்க வேலை கிடைப்பது, கடன் சுமை இல்லாமல் போவது, தொழில் முன்னேற்றம் அடைவது என அன்னையின் அற்புதங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அன்னைக்கு நன்றி கூறும் விதமாக பழைய கோவில் முதல் மாதா கோவில் வரை முழங்காலிட்டு நடந்து சென்று தங்களின் வேண்டுதல்களை கூறியும் வேண்டுதல்களுக்கு நன்றி கூறியும் நடந்து சென்ற வண்ணமாய் இருக்கின்றனர்.

Join WhatsApp Group

ஆரம்ப காலத்தில் நாகப்பட்டினம் கத்தோலிக்க கிறிஸ்தவ துணை பங்காகவும் 1771 ம் ஆண்டு தனி பங்காகவும் 920 முதல் 1933 வரையில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததால் திருத்தலமாக மாறியது. 2012 ம் ஆண்டு திருத்தலம் பெருங்கோவில் என்ற நிலையில் உயர்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *