தற்போது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திருவிழா 2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ரயில் சேவை பற்றிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திருவிழா 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வேளாங்கண்ணி மாதா ஆலயம் :
புனித ஆரோக்கிய மாதா ஆலயமானது பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அத்துடன் பேராலயம் கட்டப்பட்டதில் இருந்து ஆண்டுதோறும் வேளாங்கண்ணி திருவிழா மிக சிறப்பாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா, செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேர் திருவிழாவுடன் நிறைவடைகிறது. அந்த வகையில் 10 நடைபெறும் இந்த திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கம் :
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து அதற்க்கு முந்தைய நாள் தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு – பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் !
இதனையடுத்து 28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் 29ம் தேதி காலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும், அதன் பிறகு மறுமார்கத்தில் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.