வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம் -  ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம் -  ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

Breaking News: வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது ஏதேனும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நாட்களிலோ சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வேளாங்கண்ணி கோவில் கொடியேற்றம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது.

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

இந்த திருவிழா கிட்டத்தட்ட 10 நாட்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கவுள்ளது. இதனால் இத்திருவிழாவிற்கு பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

எனவே அவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

அதன்படி பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த சிறப்பு ரயில் (01161 / 01162) ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்புகிறது.

மேலும் இந்த ரயில் அடுத்த நாள் இரவு 11.50 மணி அளவில் வேளாங்கண்ணியை வந்தடைகிறது.

அதே போல் ஆகஸ்ட் 28ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து லோக் மானிய திலக் ரயில் நிலையத்திற்கு புறப்பட இருக்கிறது. special train

Also Read: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ் – முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு – என்னன்னு தெரியுமா?

இந்த ரயில் 29ஆம் தேதி லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தை மாலை 4:20 மணி அளவில் சென்று சேர்கிறது. வேளாங்கண்ணி கோயில் கொடியேற்றம் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில்  சிறப்பு ரயிலானது லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செப்டம்பர் 7 ஆம் தேதியானது இயக்கப்படுகிறது. ரயில் எண் 01163 / 01154 இந்த ரயில் அடுத்த நாள் இரவு 11.50 மணி அளவில் வேளாங்கண்ணியை வந்தடைகிறது. velankanni temple festival 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *