வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு: கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் இருக்கும் சிவனை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் 7வது மலையில் தான் சிவலிங்கம் உள்ளது. அதை காண்பதற்காக தான் பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. மேலும் சிவன் பக்தர்கள் மட்டுமின்றி ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு மலை ஏற தொடங்குவார்கள். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
சமீப நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகின்றனர். இதனால் இதய சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் மலையேற வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.