வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது - வனத்துறை அறிவிப்பு !வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது - வனத்துறை அறிவிப்பு !

வெள்ளியங்கிரி மலையேரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் பூண்டிக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் 7 மலைத்தொடர்களை உள்ளடக்கியது வெள்ளியங்கிரி மலை.

அத்துடன் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு லிங்க வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைகால தொடக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவையை அடுத்த பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்கள் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சித்தர் கோவில், அர்ஜுனன் வில், பீமன் களி உருண்டை மற்றும் ஆண்டி சுனை உள்ளிட்ட மலைகளை கடந்து 7 வது மலையின் உச்சியில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அதன் படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது.

இதனையடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்த காரணத்தால் பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்த்து வந்தனர், அதன்பிறகு வழக்கம் போல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது வரை சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து உள்ளனர்.

தற்போது கோடை காலம் முடிந்து இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. பருவ மழை 5, 6 மற்றும் 7வது மலைகளில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும்.

கடும் குளிர் நிலவும் என்பதால் பக்தர்களின் நலன் கருதி பூண்டி வெள்ளியங்கிரி மலையேற இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் – இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் உள்துறை நடவடிக்கை !

மேலும் மழை காரணமாக பாதைகள் சேதம் அடைந்துள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *