வெள்ளியங்கிரி மலை ஏறிய நபர் திடீர் மரணம்: கோவை மாவட்டத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கிட்டத்தட்ட 7 மலைகளை தாண்டி பயணம் செய்தால் மட்டுமே சிவ லிங்கத்தை தரிசிக்க முடியும். அப்படி இருந்து சிவனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மலையேறும் இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு நபர் வெள்ளியங்கிரி மலையை ஏறும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளூர் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவர் தனது 10 நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையில் ஏறி சென்றுள்ளார். முதல் மலை ஏறிய கொஞ்ச நேரத்தில் புண்ணியகோடி க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனே அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 பேர் வெள்ளிங்கிரி மலை ஏறி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.