மலையேர தடை?
சிவன் பக்தர்கள் பொதுவாக வெள்ளியங்கிரி மலை ஏறி லிங்கத்தை வழிபடுவது உண்டு. ஆனால் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமின்றி ட்ரக்கிங் ஆர்வம் இருப்பவர்களும் மலையேறி சிவனை வழிபடுவது வழக்கம். இதனால் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நாள் வரை எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மலையேறும் பக்தர்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞனும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.