
ரொம்பவே வினோதமாக நடந்த Marriages: இன்றைய சமுதாயத்தில் 90ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் ஆகாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் 2k கிட்ஸ் அவசர அவசரமாக கல்யாணம் செய்து டைவர்ஸ் கேட்டு கோர்ட் வரிசையில் நிற்கின்றனர்.
ரொம்பவே வினோதமாக நடந்த Marriages
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆணும் ஆணும் காதலிப்பதும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பதும் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு காலம் மாறி போச்சு.
இந்நிலையில் இந்த உலகத்தில் வித்தியாசமாக திருமணம் செய்து கொண்ட நபர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொய்ருல் அனம்( khoirul anam ):

இந்தோனேசியாவைச் சேர்ந்த கொய்ருல் அனம், தனது ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து கொண்டார். அது உணவை சமைத்து போடுவதாக கூறி கல்யாணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரே வாரத்தில் அந்த குக்கரை டைவர்ஸ் செய்துள்ளார். ஏனென்றால் அந்த குக்கர் வெறும் அரிசி மட்டும் சமைத்து தருவதாக கூறி டைவர்ஸ் செய்துள்ளார்.
சந்தீப் பட்டேல் (sandeep patel):
வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பத்வாபூர் என்ற தொலைதூர கிராமத்தில் சந்தீப் பட்டேல் என்பவர் ஒரு நாகத்தை திருமணம் செய்து கொண்டார். இதை காண 15,000 பேர் குவிந்த நிலையில், பாம்பை கொடுமை படுத்துவதாக கூறி வனத்துறையினர் மற்றும் காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
டிடாங் சமூகம்(didong)
டிடாங் சமூகம் தம்பதியரின் திருமணத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு கழிவறையைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அப்படி மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பழங்குடியினர் கூறியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குளிக்க அனுமதி வழங்கப்படும்.
Also Read: சோப்பு போட்டு முகத்தை கழுவுவது நல்லதா? பெண்களே இதை முக்கியமா தெரிஞ்சிக்கோங்க?
துஜியா சமூகம்:
இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தின் போது கல்யாண பொண்ணு திருமண தேதி வருவதற்கு ஒரு மாதம் வரை தின்தோறும் ஒரு மணி நேரம் அழுக வேண்டும். கல்யாணம் முடிந்த பிறகு தங்களை விட்டு அந்த பெண் பிரிவதை உணர வேண்டும் என்பதற்காக வெளி காட்டுவதற்காகவும் இதை செய்து வருகின்றனர்.
சுவீடன் சமூகம் (sweden)
இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் முடிந்த புது மாப்பிள்ளை ரூமுக்குள் வெளியே நிற்க வைத்து, அப்போது கல்யாணத்திற்கு வரும் மாப்பிள்ளை நண்பர்கள் முத்தம் கொடுத்து கொள்ளலாம் என்று புதுவித முறையைக் கையாண்டு வருகின்றனர்.