நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் புக்கிங் தற்போது தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை எழுப்பி வருகிறது.
அஜித் குமார்:
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு 2025-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் முக்கியமான ஒன்று தான் விடாமுயற்சி.
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
இந்த ஆண்டே இப்படம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு 2025 பொங்கலுக்கு தள்ளிப் போய்விட்டது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி நேற்று இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இதில் தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார் என அவரே அறிவித்து இருந்தார். மேலும் இந்த படம் வெளியாக இன்னும் 25 நாட்கள் இருக்கும் நிலையில், இப்பொழுது வரை முதல் பாடல் மற்றும் ட்ரைலர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
இந்த நிலையில், விடாமுயற்சி படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. அட ஆமாங்க, UK-வில் தான் புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அங்குள்ள அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணிவுக்கு பிறகு அவர் படம் வெளியாக இருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!