விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு - திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!!விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு - திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!!

விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி1. மகிழ் திருமேனி கைவண்ணத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் “விடாமுயற்சி” படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read: தவெக கட்சியின் கொடி ஜூலை 26ம் தேதி அறிமுகம்? அதிரடியாக அறிக்கையை வெளியிட்ட தலைவர் விஜய்!!

அதில் அஜித்தும், திரிஷாவும் ரொமான்ஸ் செய்வது போல் போட்டோவில் அமைந்துள்ளது. மேலும் அஜித்தின் இந்த லுக் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  1. actor ajithkumar vidaamuyarchi movie ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *