விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித்விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித்

  விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடக்கி உள்ள நிலையில் அஜித் தந்தை , மகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித் ! இது வேற லெவல் அப்டேட் 

விடாமுயற்சி படத்தில்  இரட்டை வேடங்களில் அஜித்

  பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். திரைப்படத்தில் நாயகியாக திரிஷா நடிக்கின்றார். அனிருத் திரைப்படத்திற்கு இசை அமைக்க இருக்கின்றார். முக்கியமாக வில்லன் கதாப்பாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கின்றார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விடமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது வெளிநாட்டில் தொடக்கி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.   

JOIN WHATSAPP CHANNEL

  விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் வயதான அஜித் கதாப்பாத்திரத்திற்கு தான் திரிஷா ஜோடியாக நடிக்க இருக்கின்றார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

  அதில் ஒரு கதாப்பாத்திரம் வயதான கதாப்பாத்திரம் மற்றொன்று இளமை தோற்றம். கடைசியாக பில்லா திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கின்றார் என்பதால் இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

  விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். அதே போல் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இருவரின் திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்றது. லியோ திரைப்படத்தில் நடித்த திரிஷா அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். 

இறுகப்பற்று படம் திரை விமர்சனம் ! புதிதாக திருமணமானவர்கள் கட்டாயம் பார்க்கனும்  !

  மேலும் லியோ திரைப்பட வில்லன் சஞ்சய் தத் தான் விடாமுயற்சி திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கின்றார். முக்கிய விஷயம் என்னவென்றால் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் வயதானவர் மற்றும் இளமை கதாப்பாத்திரம் என்ற இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கின்றார். இதனால் விஜய் வழியை அஜித் பின்பற்றுகின்றார் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்கள் தற்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கின்றார் என்ற தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *