குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள்குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள்

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள். குழந்தைகள் கல்வியை தொடங்க தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள். கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருப்பது , பேச்சு , திறமை , கவனக்குறைவு போன்றவைகள் சில குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை. ஆனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணுவர்.

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள்

  கல்வி செல்வத்தை வழங்கும் தெய்வம் சரஸ்வதி. சரஸ்வதி கோவில்களில் கல்வியை தொடங்கும் போது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். அதன்படி தமிழகத்தில் இருக்கும் சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவி கோவில்கள் பற்றி அறியலாம் வாங்க. 

JOIN WHATSAPP CHANNEL

1. பிரம்ம வித்யாம்பிகை கோவில் :

   தமிழகத்தில் சீர்காழியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை கோவில். இக்கோவிலில் ஸ்வேதாரண்யேஸ்வரர் மற்றும் அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை மூலவராக இருக்கின்றார்கள். இக்கோவிலில் வீற்றிருக்கும் வித்யாம்பிகை அன்னை சரஸ்வதி தேவியாக மக்களால் வழிபாடு செய்யப்படுகின்றாள். மனிதர்களுக்கு புத்தியை அளிப்பது நவ கிரகங்களில் புதன் பகவான் தான். இக்கோவிலில் புதன் பகவானுக்கு தனி சன்னதி இருக்கின்றது. இக்கோவிலில் இருக்கும் புதன் பகவான் மற்றும் வித்யாம்பிகையை வழிபடும் போது கல்வி வளம் மற்றும் புத்தி கூர்மை கிடைக்கின்றது.

2. வேத சரஸ்வதி :

   தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது வேத சரஸ்வதி கோவில். இத்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் யாழைப் பழித்த பொழியம்மை. இக்கோவில் பிரகாரத்தில் இருக்கும் சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடியுடன் காட்சி தருகின்றாள். ஏனென்றால் அம்பிகையின் குரல் யாழை விடவும் இனிமையாது என்பதால் வீணை இல்லாமல் காட்சி தருகின்றாள் வேத சரஸ்வதி.

3. அன்னை சரஸ்வதி தேவி :

   திண்டுக்கல் முதல் வேடசந்தூர் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் சௌந்தரராஜாப் பெருமாள் வீற்றிருக்கும் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கல்விக்கு தெய்வமாக இருக்கும் அன்னை சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. திருவோண நட்சத்திர தினத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேக பூஜை , தேங்காய் நாட்டுசக்கரை கலந்த நெய்வேத்தியம் படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். மேலும் சரஸ்வதி பூஜை தினத்தில் அன்னை சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !

4. ஞானவாணி :

   தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது திருக்கண்டியூர் ஈஸ்வரன் பிரம்மசிரகண்டீசர் கோவில். பிரம்மாவிற்கு என்று தனிக்கோவில் இங்கு அமைந்துள்ளது. இங்கு சரஸ்வதி தேவி தன் கணவருடன் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். இக்கோவிலில் இருக்கும் பிரம்மன் மற்றும் கல்வி நாயகியை வணங்கும் போது மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

5. ஞான சரஸ்வதியின் திருவருள் :

   திருச்சி மாவட்டத்தில் உத்தமர் கோவில் கிராமத்தில் உள்ளது ஈசன் பிச்சண்டவர் கோவில். இக்கோவிலில் சரஸ்வதி தேவிக்கும் பிரம்மனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கிருக்கும் சரஸ்வதி ஞான சரஸ்வதியாக மக்களிடம் வணங்கப்படுகின்றாள். இங்கு சரஸ்வதி தேவி கையில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி மற்றும் ஜெபமாலையுடன் காட்சி தருகின்றாள்.

6. கலைவாணி :

   வாணியம்பாடியில் இருக்கின்றது கலைவாணி வீற்றிருக்கும் கோவில். இக்கோவிலில் சிவன் மற்றும் பார்வதியை கலைவாணி வணங்கும் சிற்பம் உள்ளது. மேலும் சரஸ்வதி வீணை மீட்டும் சன்னதி ஒன்றும் இக்கோவிலில் உள்ளது.

குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள்

ஞாபக சக்தி அதிகரிக்க சொல்லும் மந்திரம் :

   ஓம் ஹ்ரீம் ஐம் நமோ பகவதி ஐம் வத வத வாக் வாதின்யை ஸ்வாஹா. இந்த சரஸ்வதி தேவி மந்திரத்தினை தினமும் 108 முறைகள் அல்லது 28 முறைகள் சொல்ல வேண்டும். இந்த மந்திரங்கள் சொல்லும் போது குழந்தைகளுக்கு இருக்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும். சபைகளில் வெற்றி கிடைக்கும்.

விஜயதசமி தினத்தில் குழந்தைகள் கோவில்கள் அல்லது வீடுகளில் சாமி முன் வித்யாரம்பம் அரிசியில் பெயர் எழுதி தங்களின் கல்வியை தொடங்குவர். சரஸ்வதி தேவிக்கு என்று உகந்த கோவில்களில் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்கும் போது கல்வியில் சிறந்தவர்களாக விளங்குவர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *