விக்னேஷ் சிவனுக்கு LICவிக்னேஷ் சிவனுக்கு LIC

டைரக்டர் விக்னேஷ் சிவனின் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்(LIC) ‘ . இந்த படத்தின் தலைப்பை 7 நாட்களுக்குள் மாற்றக்கோரி 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிற்கும், விக்னேஷ் சிவனுக்கு LIC நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு LIC

இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிதாக எடுக்கும் படம் தான் L .I .C. இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகன் லவ் டுடே படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தினை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

கேப்டன் ஐயா.., என்றும் உங்கள் வழியில்.., சபதம் எடுத்து களத்தில் இறங்கிய விஜய் டிவி புகழ்.., வைரலாகும் வீடியோ!!

லியோ படத்தின் சர்ச்சை முடிந்தபாடில் தற்போது L .I .C படத்தின் தலைப்புக்கும் ஆப்பு வந்துள்ளது.இந்த L .I .C படத்தின் தலைப்பை 2015 ல் ஏற்கனவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் S .S .குமரன் உரிமம் வாங்கியுள்ளார் . இது தெரிந்தும் கண்டுகொள்ளாத விக்னேஷ் சிவன் அவரின் திரைப்படத்திற்கு இந்த தலைப்பை பயன்படுத்தியுள்ளார். இதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு LIC

இத்தனை பிரச்னையை அறிந்த L .I .C நிறுவனம் தற்போது இந்த தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த கோரி விக்னேஷ் சிவனுக்கும், 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில் வரும் 7 நாட்களுக்குள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளது. விக்னேஷ் சிவனுக்கு LIC பெயர் போட்டதால் சோதனையாக அமைந்துள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *