தளபதியின் "கோட்" படத்தில் மறைந்த விஜயகாந்த்., கேப்டன் குடும்பத்தினர் போட்ட முக்கிய கண்டிஷன்.., என்னனு தெரியுமா?தளபதியின் "கோட்" படத்தில் மறைந்த விஜயகாந்த்., கேப்டன் குடும்பத்தினர் போட்ட முக்கிய கண்டிஷன்.., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் விஜய் தற்போது, அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பணிகளில் மும்மரமாக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா பணியாற்றுகிறார். இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படத்தோட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜய காந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கேப்டன் குடும்பத்திடம் வெங்கட் பிரபு அனுமதி வாங்கிய நிலையில், அவர்கள் ஒரு நிபந்தனையும் வைத்துள்ளனர். அதாவது, கோட் படம் திரைக்கு வருவதற்கு முன்னரே கேப்டன் வரும் காட்சிகளை தங்களுக்கு போட்டு காமிக்க வேண்டும் என்று விஜயகாந்த் குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் படத்தில் வெங்கட் பிரபு என்ன மேஜிக் செய்து வைத்திருக்கிறார் என்று.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *