விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம். புலி திரைப்படத்தின் ஊதியத்தினை மறைத்து வருமான வரித்துறையில் கணக்கு கட்டி உள்ளார். இதனால் விஜய்க்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் வருகின்ற 30ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் ! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
வருமான வரி தாக்கல் செய்ததில் சிக்கல் :
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. புலி திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் ரூ. 15 கோடி சம்பளம் வாங்கி இருக்கின்றார். ஆனால் 2016 – 2017ம் ஆண்டிற்க்கான வருமான வரியை தாக்கல் செய்யும் போது 35,42,91,890 ரூபாய் என்று தாக்கல் செய்துள்ளார். அதாவது 35 கோடி 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் மட்டுமே என்று வருமான கணக்கை தாக்கல் செய்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை :
இவர் குறைவாக கணக்கு தாக்கல் செய்துள்ளார் என்று கருதிய வருமான வரித்துறை விஜய் வீட்டில் சோதனை செய்தது. சோதனையின் போது கிடைத்த பல்வேறு ஆவணங்கள் பார்த்த போது புலி திரைப்படத்திற்கு வாங்கிய ரூ. 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தனர்.
ரூ. 1.5 கோடி அபராதம் :
சம்பளத்தினை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததால் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. வருமான வரித்துறை உத்தரவினை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிமன்றம் 2022ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து இருந்தது. மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
9 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு ! தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் – முதல்வர் உறுதி !
30ம் தேதிக்கு ஒத்தி வாய்ப்பு :
வருமான வரித்துறை சார்பில் நேற்று முதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் இருந்து கால அவகாசம் கேட்கப்பட்டு இருக்கின்றது. எனவே நீதிபதிகள் வழக்கு விசாரணையை நீதிபதி 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ. 1.5கோடி அபராத தொகையை முழுமையாக செலுத்த போகின்றாரா , வரி குறைக்கப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது வருகின்ற 30ம் தேதியில் தெரியவரும்.