தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய் - ஆரவாரத்துடன் வரவேற்ற நிர்வாகிகள்!தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய் - ஆரவாரத்துடன் வரவேற்ற நிர்வாகிகள்!

தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய்: கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் இந்திய தமிழ் சினிமாவின் முடிசூடா ராஜாவாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது சினிமாவை கை விட்டு அரசியலில் முழு மனதோடு இறங்கியுள்ளார்.

தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய்

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவினார். மேலும் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தொண்டர்கள் கட்சியின் கொடி அறிமுகத்திற்காக ஆவலாக காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் கட்சி கொடி ஆகஸ்ட் 22ம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தவெக கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். tvk party the goat

அதன்படி இன்று காலை விரைவில் பனையூரில் இருக்கும் கட்சி ஆபிஸ்க்கு தலைவர் விஜய் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து காலை 9.15 முதல் 9.30 இடைப்பட்ட நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது கையால் 33 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். thalapathy vijay

Also Read: ரஜினி குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது?

கொடியில் இரண்டு பக்கம் போர் யானை இருக்க நடுவில் வாகை மலர் இடம்பெற்றிருந்தது.

மேலும் “தலைவன் யுகம் பொறக்குது” என்ற தலைப்பில் கட்சி பாடல்கள் அமைந்திருந்தது.

அதுமட்டுமின்றி கொடி ஏற்றும் பொழுது கட்சியின் பாடல் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்தடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விழாவிற்கு வந்த நிர்வாகிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. tvk party flag

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *