Home » சினிமா » விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

கோலிவுட் கிங் மேக்கர் தளபதி விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது ஒரு பக்கம் சினிமாவும் இன்னொரு பக்கம் அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறார். அதன்படி, தற்போது விஜய் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சேர்த்து பல முன்னணி பிரபலங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்த நிலையில், தற்போது, பனையூரில் செட் அமைத்து நடைபெற்று ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வந்த ஷூட்டிங்கை EFSI அமைப்பினர் தலையிட்டு நிறுத்தி உள்ளனர். அதாவது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் நிறுவனம்  யாஸ் மற்றும் நயன்தாரா நடிக்கும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த படத்தில் வேலை பார்த்தவர்களுக்கு சுமார் 22 நாட்கள் பேட்டா காசு கொடுக்கவில்லையாம்.

இதனால் FEFSI அமைப்பினர் தலையிட்டு இவ்வளவு நாட்கள் ஊதியம்  கொடுக்காமல் இருக்க கூடாது என்று கூறி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஐடி ரைடால் KVN நிறுவனத்தின் அக்கவுண்டுகளையும் முடக்கி வைத்து உள்ளனர். இந்த சம்பவத்தால் விஜய் மிகவும் அதிருப்தியில் இருந்து வருகிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது. இது கடைசி படம் வேற, சொல்லவா வேணும். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!

நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top