தளபதியின் மாமனார் – மாமியாரை பார்த்துள்ளீர்களா? தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் . சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதற்கிடையில் நடிகர் விஜய் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளதை நாம் அறிவோம். ஆனால் விஜய்யோட மாமனார் மாமியாரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜய்யின் மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தளபதியின் மாமனார் மாமியார் அவங்க தானா என்று வாயடைத்து போய் உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.