ரோஜாவை எதிர்த்து போட்டி போடும் விஜய் பட நடிகை?.., அதிரும் அரசியல் களம்.., யாருக்கு வெற்றி கிடைக்கும்?ரோஜாவை எதிர்த்து போட்டி போடும் விஜய் பட நடிகை?.., அதிரும் அரசியல் களம்.., யாருக்கு வெற்றி கிடைக்கும்?

விஜய் பட நடிகை

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஏழு கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் முதலில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரபல நடிகையான ரோஜா ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட  களமிறங்கியுள்ளார். அங்கு தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு போட்டியாக பிரபல நடிகை ஒருவர் களமிறங்க போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,  தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வேட்பாளராக நடிகை அனுஷ்கா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் தற்போது ஜன சேனா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே விரைவில் அனுஷ்கா திரையை விட்டு தரையில் இறங்கி அரசியலில் போராட போகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், கண்டிப்பாக அவர் முழு அரசியல்வாதியாக களம் இறங்குவார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நெருங்கும் மக்களவை தேர்தல்.., ‘100 நாள் வேலை ஊதியம்’.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *