விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா திரைப்பட டிரைலர் நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு !விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா திரைப்பட டிரைலர் நாளை வெளியீடு - படக்குழு அறிவிப்பு !

விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா திரைப்பட டிரைலர் நாளை வெளியீடு. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் 50 வது படமாக உருவாகிக்கொண்டிருக்கும் மகாராஜா என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீட்ஸா திரைப்படத்தில் தொடங்கி ஜவான் வரை பல வெற்றி படங்களில் நடத்த தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது அவர் குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமடைந்த நிலன் சாமிநாதன் இயக்கம் மகாராஜா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏறக்குறைய படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நோட்டு புத்தகங்களின் விலை 20% குறைவு – வியாபாரிகள் தகவல் !

மேலும் மகாராஜா திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் மற்றும் நடராஜன் சுப்ரமணியம். பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்
இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதன் பிறகு பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், கலை இயக்குநராக வி செல்வகுமார் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *