பிரபல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வாங்கும் சம்பளம் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் முக்கியமான செய்தி வைரலாக பரவி வருகிறது.
ஜேசன் சஞ்சய்:
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருபவர் தான் நடிகர் தான் தளபதி விஜய். தற்போது அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவரின் சினிமா கெரியருக்கு முழுக்கு போடுவதால். அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும் கூட, அவரின் அரசியலின் வருகையை வரவேற்று வருகின்றனர்.
முதல் படத்திற்கு விஜய்யின் மகன் சஞ்சய் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா? புலிக்கு பொறந்தது பூனையாகுமா?
அப்பா சினிமாவை விட்டு போனால் என்ன உங்களுக்காக நான் வருகிறேன் என்று விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். அதுவும் அவர் அப்பா போல நடிகராக வருவார் என்று பார்த்தால் தாத்தா போல இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் அவர் படத்தில், ஹீரோவாக சந்தீப் கிஷான் கமிட்டாகியுள்ளார். இந்த அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது, அதோடு இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 பிரபலம் தூக்கிட்டு தற்கொலை – அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!
மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில், தனது முதல் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதம் ஆரம்பிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்