அந்த நடிகரும் இல்ல.., இந்த ஹீரோவும் இல்ல.., விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் சேரும் வாரிசு கதாநாயகன்!!அந்த நடிகரும் இல்ல.., இந்த ஹீரோவும் இல்ல.., விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் சேரும் வாரிசு கதாநாயகன்!!

விஜய் மகன் சஞ்சய்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். மக்கள் பணிக்காக திரைத்துறையில் இருந்து விலக போவதாக விஜய் அறிவித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இடத்தை நிரப்பும் விதமாக அவருடைய மகன் சஞ்சய் சினிமாவில் நுழைய இருக்கிறார். ஆனால் நடிகனாக இல்லாமல், அவரின் தாத்தாவை போல இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.

இவரின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இந்த் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி, கவின் என அடுத்தடுத்து பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது லிஸ்ட்டில் மீண்டும் ஒரு நடிகர் பெயர் அடிபட்டுள்ளது. அதாவது,  சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விமானத்துல போன உசுருக்கே ஆபத்தா முடியலாம்.., மகனுக்காக நெப்போலியன் எடுக்கும் பெரிய ரிஸ்க்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *