தளபதியின் "THE GOAT" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!தளபதியின் "THE GOAT" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Kollywood News: தளபதியின் “THE GOAT” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் “தி கோட்” திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து பிரபு தேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். thalapathy vijay

தளபதியின் “THE GOAT” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக வெளியான spark பாடல் கடுமையான விமர்சனத்தை பெற்றது. goat movie

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று படத்தை குறித்து அப்டேட் வெளியாகும் என தயாரிப்பாளர் கூறிய நிலையில், எந்தவொரு அப்டேட் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

Also Read: பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா? வெளியான ஷாக்கிங் போட்டோ – நாக சைதன்யாவை பழி வாங்கவா இது?

இப்படி இருக்கும் சூழ்நிலையில் வெங்கட் பிரபு கண்டிப்பாக இன்று அப்டேட் வெளியாகும் என்று கூறியுள்ளார். அவர் கூறியது போல இன்று தற்போது கோட் படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடித்த கோட் படத்தின் ட்ரைலர் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *