Home » சினிமா » டிஆர்பிக்காக மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி.., அந்த பேமஸ் காமெடி ஷோ மீண்டும் வர போகுதா?.., வெளியான தகவல்!!

டிஆர்பிக்காக மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி.., அந்த பேமஸ் காமெடி ஷோ மீண்டும் வர போகுதா?.., வெளியான தகவல்!!

டிஆர்பிக்காக மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி.., அந்த பேமஸ் காமெடி ஷோ மீண்டும் வர போகுதா?.., வெளியான தகவல்!!

பேமஸ் காமெடி ஷோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அதன்படி பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்னரே விஜய் டிவியின் டிஆர்பியை உச்சத்தில் வைத்திருந்த ஷோ என்றால் அது கண்டிப்பாக மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய “அது இது எது” ஷோ தான்.

இந்த ஷோ ரசிகர்களிடையே இவ்வளவு வரவேற்பு கிடைக்க முக்கிய அங்கமாக விளங்கியது தான் “சிரிச்சா போச்சு” ரவுண்டு தான். இந்த ஒரு ரவுண்டை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த ஷோ முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி பேமிலி ஆடியன்ஸை கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் சிவா சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டார்.

ஏன் அவர் மட்டுமின்றி ரோபோ சங்கர், புகழ், வடிவேல் பாலாஜி உள்ளிட்ட பல கலைஞர்கள் நல்ல இடத்திற்கு சென்றுவிட்டனர். சிவா இடத்தை தற்போது நிரப்பி வரும் மகாபாவை வைத்து மீண்டும் அது இது எது ஸ்டார்ட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தாம்சன் தலைமையில் இது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது அது இது எது சீசன் 3 தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வாகன ஓட்டிகளே.., நாளை இந்த பகுதியில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., எந்தெந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கோங்க!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top