
“நீ நான் காதல்” சீரியலில் இருந்து விலகிய நடிகை: விஜய் டிவியில் மக்களுக்கு பிரியமான எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் தான் நீ நான் காதல். ராகவ்-அபிநயா, ஆகாஷ்-அனு இந்த இரண்டு கியூட் காதல் ஜோடிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடர் நகருகிறது.
இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைய புது புதுமுகங்கள் நடிக்க தொடங்கப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தொடர்ந்து மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படி சூப்பர் ஹிட் சீரியலாக இருந்து வரும் இந்த தொடரில் தற்போது புதிய மாற்றம் ஒன்று நேர்ந்துள்ளது.

அதாவது நீ நான் காதல் சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாய் காயத்ரி. மேலும் மக்களின் மனதை கொள்ளை கொண்டு வரும் நிலையில், தற்போது நடிகை சாய் காயத்ரி சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2 – வெளியான சூப்பர் தகவல்!
மேலும் அவருக்கு பதில் நடிகை அக்ஷிதா இனி அனுவாக நடிக்க இருக்கிறாராம். ஆனால் அவர் விலகியதற்கான காரணம் குறித்து தற்போது வரை தெரியவில்லை. இந்த தொடர் Iss Pyaar Ko Kya Naam Doon என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்