தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 27ம் தேதி இறந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வரவில்லை என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வரவில்லை என்று கேப்டன் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நடிகர் சூர்யா விஜயகாந்தை நல்லடக்கம் செய்த இடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
இதனை தொடர்ந்து விஜய் டிவி புகழ் இரண்டாவது முறையாக அஞ்சலி செலுத்த வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கேப்டன் வீட்டை நாடி வருபவர்களுக்கு எப்போதும் வயிறார சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார். நானும் அவரை போல் என் ஆபிசுக்கு பசியாக வருபவர்களுக்கு மதிய சாப்பாடு தொடர்ந்து கொடுக்க அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என்று கூறியுள்ளார். இன்று முதல் அவரது ஆபிஸில் வைத்து சாப்பாடு கொடுக்கப்படும் என்று புகழ் தெரிவித்துள்ளார்.