TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட் - யார் இவர்? மகாத்மா காந்தியே வியந்த வீரமங்கை!TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட் - யார் இவர்? மகாத்மா காந்தியே வியந்த வீரமங்கை!

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட்: நடிகர் விஜய் தற்போது ஆரம்பித்துள்ள  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. எனவே இதையொட்டி மாநாட்டு திடலில்  வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் வீரமங்கை அஞ்சலையம்மாளின் கட் அவுட்டும் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், யார் இந்த வீரமங்கை அஞ்சலையம்மாள் என்று சோசியல் மீடியாவில் தேடி வருகின்றனர். அவர் யார் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வீரமங்கை அஞ்சலையம்மாள்:

வீரமங்கை அஞ்சலையம்மாள் இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வந்தவர். கடலூரில் பிறந்த இவர்,  5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இருந்தாலும் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 1908 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய முருகப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடிபெயர்ந்தார்.  

TVK மாநாட்டில் இடம்பெற்ற அஞ்சலையம்மாள் கட்அவுட்

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக “ஒத்துழையாமை இயக்கத்தை” காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு அறிவித்த போது, அதில் பங்கேற்ற முதல் பெண்மணி இவர்தான். இது போன்று பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளங்கினார். எனவே அஞ்சலையம்மாளின் துணிச்சலை பார்த்து வியந்துபோன மகாத்மா காந்தி, அவரை தென்னாட்டு ஜான்சி ராணி என்று வியந்து பாராட்டினார்.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு சலுகை – வெளியான முக்கிய அறிவிப்பு!

அதுமட்டுமின்றி கடந்த 1937 to 1946 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

இதையடுத்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் 1952 ஆம் ஆண்டு 3வது முறையாக எம் எல் ஏ ஆனார்.

இதனை தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு மறைந்த அஞ்சலையம்மாளுக்கு அவரது சொந்த ஊரான கடலூரில் தமிழக அரசு சிலை நிறுவியுள்ளது.

அவருடைய கொள்ளுப்பேரன் தான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !

2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *