Home » சினிமா » தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – கடைசியில் நடந்தது என்ன?

தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – கடைசியில் நடந்தது என்ன?

தவெக கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் - கடைசியில் நடந்தது என்ன?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக வெற்றி கழகம்( தவெக) கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் செய்தார்.

தளபதி விஜய்:

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவினார். இதனை தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த விஜய் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தனது கட்சியின் பாடல் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த த வெ க கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிறது அக்டோபர் 27 ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருக்கிறது.

அதற்கான பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  முதல் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.

கும்பகோணத்தில் புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம்

மேலும் தொடர்ந்து மாநாடு குறித்து அவர் பேசி கொண்டிருக்கும் சமயத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென புஸ்ஸி ஆனந்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதாவது, அந்த பெண்ணின் தம்பி பல ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்க உறுப்பினராக செயல்பட்டுள்ளாராம். ஆனால் அவருக்கு கட்சி பொறுப்பு எதுவும் கொடுக்க படாமல் ஒதுக்கப்பட்டுள்ளாராம்.

Also Read: அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா – ரீசண்டா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் பிரபலம் தான்!

எனவே அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு புஸ்ஸி ஆனந்த் உங்களுடைய புகாரை எழுதிக் கொடுங்கள். நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பி வேறு கூட்டத்திற்கு சென்று விட்டார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top