TVK Party: தவெக கட்சிக்கொடியில் இடம்பெறும் முக்கிய மலர்: சினிமாவை கலக்கி வரும் நடிகர் விஜய் தற்போது முழு மனதார அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அதன்படி, கடந்த பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவினார். இதையடுத்து ஒரு ஆப்பை கிரியேட் செய்து, 2 கோடி தொண்டர்களை கட்சியில் சேர வைப்பதே நமது இலக்கு என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். kollywood actor vijay
மேலும் தளபதி 69 படத்துடன் அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும், மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்ய போவதாக அறிவித்தார். அதேபோல் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். மேலும் விஜய் கட்சியின் முதல் மாநாடு எங்கு எப்போது நடக்கப்போகிறது என்பது தொடர்ந்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. world best dancer in tamil cinema
தவெக கட்சிக்கொடியில் இடம்பெறும் முக்கிய மலர்
அந்த வகையில் தற்போது தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் தனது கட்சியின் கொடி, நிறம் மற்றும் சின்னம் குறித்து அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Also Read: திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ – ஒரு வேலை இருக்குமோ? புகைப்படம் இதோ!
அதாவது தவெக கட்சியின் கொடியில் இரு வண்ணங்களுக்கு மத்தியில் “வாகை மலர்” இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக ராஜா காலத்தில் ஒரு ராஜா போரில் வெற்றி பெற்றால் அவருக்கு வாகை மலர் கொடுக்கப்படுவது வழக்கம். அது அவரின் வெற்றியை குறிக்கும்.
எனவே வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் த.வெ.க. கட்சிக் கொடியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் விஜய் என்றால் வெற்றி தானே. மாநாட்டில் தான் கொடியின் நிறம் மற்றும் சின்னம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அப்படி போடு… இது தான்யா Weekend
எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது
“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?
சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்