2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை - தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை - தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதில் இருந்து அவர் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த மாநாட்டில் கூட விஜய் திமுக கட்சியை விமர்சித்த நிலையில், அதிமுக கட்சி குறித்து ஒன்றுமே பேசவில்லை.

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

இதனால் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று தொடர்ந்து சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது. குறிப்பாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை அவர் இணைத்து கூட்டணியை விஜய் உருவாக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று ஒரு செய்தி இணையத்தில் புரட்டி போட்டு வந்த நிலையில், அதற்கு தவெக பொது செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

2026 தேர்தலில் TVK தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதான்!  மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

அதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார். மக்களை குழப்பும் விதமாக ஏகப்பட்ட தவறான செய்திகள் சோசியல் பரவி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றும், தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தவெக பொது செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்

IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா?

தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்? 

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *