தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டி போடுவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
TVK PARTY:
கோலிவுட்டின் முக்கிய நடிகராக வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதோடு, கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கை மற்றும் கட்சி கொள்கை எதிரி என அனைத்தையும் திட்டவட்டமாக கூறினார். மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி அரசியல் பயணத்தை நோக்கி ஓடத் தொடங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே தற்போது அந்த தொகுதி காலியாக இருக்கிறது. இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு தவெக விஜய் இம்முறை களம் காண்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது.
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!
அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜய் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும், இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கூறியது, அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த வருடம் சுற்றுப்பயணம், பூத் கமிட்டி என கட்சியை பலப்படுத்த அனைத்து முயற்சிகளிலும் தவெக பயன்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, வருகிற 2025 பிப்ரவரி மாதம் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 பொங்கல் பரிசு தொகுப்பு.., இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு
ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!
செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!