Home » சினிமா » அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக போவதாக தெரிவித்தார். அதாவது சமீபத்தில் இவர் தொடங்கிய “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை மேம்படுத்த அவர்  களத்தில் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய இருக்கிறார். அதற்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை தயார் செய்து வருகிறார் தலைவர் விஜய். இதனை தொடர்ந்து இன்று தலைவர் மற்றும் தவெக உறுப்பினர்கள் உறுதிமொழிகள் எடுத்து கொண்டது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அப்போது பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தான் இலக்கு என்று கூறியுள்ளார். மேலும் அவர்களை சேர்ப்பதற்கு  மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி புதிய வாக்காளர்கள், மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top