தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது - தலைவர் விஜய் தரப்பில் பதில்!தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது - தலைவர் விஜய் தரப்பில் பதில்!

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை நிறுவினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கட்சி பாடல் மற்றும் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். vijay tvk party

இதனை தொடர்ந்து பலரும் எதிர்பார்த்த தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தி தனது கொள்கைகளை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் இது தொடர்பாக பாதுகாப்புக்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் காவல் துறையிடம் மனு அளித்தார்.

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து 21 கேள்விகள் எழுப்பி பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதிலை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் காவல் துறையிடம் அளித்துள்ளார். விரைவில் கட்சியின் முதல் மாநாடு குறித்து தவெக கட்சியின் தலைவர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் தலைவர் விஜய்யை தவிர்த்து எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் கலந்து கொள்ளவில்லை என்று த.வெ.க சொல்லப்பட்ட இருப்பதாகத் தெரிகிறது.

Also Read: கென்யாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி!

அதுமட்டுமின்றி 55 ஆயிரம் தொண்டர்கள் அமர இருக்கைகள் மாநாட்டில் போடப்பட இருப்பதாகவும், அதில் பெண்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. மாநாடு 12 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற இருக்கிறது.

மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு அங்கேயே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *