
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் விருதுகள் குறித்து பேசியது தற்போது சினிமா துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய் தேவரகொண்டா
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது அவர் ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தொடர்ந்து ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், அசராமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது ஒருவர் விருது குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு விஜய், ” விருது மேல் எனக்கு பெரிய நாட்டம் இல்லை. விருதுகளை வெறும் கல்லாக வீட்டுக்குள் வைக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே எனக்கு கிடைத்த முதல் விருதை ரூ. 25 லட்சத்துக்கு ஏலத்தில் விற்ற பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு சமர்பித்தேன். மேலும் நான் வாங்கிய சில விருதுகள் என்னுடைய ஆபிஸ் மற்றும் அம்மா வீட்டில் இருக்கிறது. அதுமட்டுமின்றி அர்ஜுன் ரெட்டி படத்துக்காக வாங்கிய விருதை படத்தோட இயக்குனருக்கே கொடுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். நட்சத்திரங்களை கவுரவிக்கும் விருதுகளை அவமதிப்பது போல் அவருடைய பேச்சு இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.