ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த ‘பைரவ தீபம்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் விஜய ரங்க ராஜு என்கிற ராஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பிரபலமானார்.
அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதற்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
ரோபோ ஷங்கர் மகள் நடிகை இந்திராஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு.., குவியும் வாழ்த்துக்கள்!!
இந்நிலையில், நடிகர் விஜய ரங்கராஜும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 70. மேலும் அவருக்கு தீக்ஷிதா மற்றும் பத்மினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்த செய்தி திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!