மறைந்த கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம் முன்னிட்டு தவெக தலைவர் விஜய்க்கு அவருடைய மகன் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
TVK VIJAY:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், அரசியலில் குதித்தார். ஒரு கையில் சினிமாவையும், மறு கையில் அரசியலையும் வைத்து மேனேஜ் செய்து வந்தார். இப்படி, தேமுதிக கட்சி தலைவராகவும் சினிமாவில் சாணக்கியனாகவும் இருந்து வந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
அவரது இழப்பிற்கு பல சினிமா, அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் செருப்பு வீசி அசிங்கப்படுத்தினர். அந்த சமயம் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நாளை கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பு அரசியல்வாதிகளுக்கு தேமுதிக கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறார்கள்.
EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த செளந்தர்யா.., அடேங்கப்பா இவரா காதலன்.., வீடியோ உள்ளே!!
அந்த வகையில், தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து சுதீஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள் விஜய்க்கு, விஜய காந்தின் வெண்கல சிலை ஒன்றை வழங்கினர். நாளை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!