இன்று அறிமுகப்படுத்தப்பட்ட விஜய்யின் தவெக கொடிக்கு வந்த புதிய சிக்கல், மேலும் அதில் இடம்பெற்றுள்ள யானை, வாகை மலர் போன்ற சின்னங்கள் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் தவெக கொடிக்கு வந்த புதிய சிக்கல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடி :
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பாடலை இன்று அறிமுகப்படுத்தினார்.
விஜய் அறிமுகப்படுத்திய தவெக கொடியில் இளஞ்சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்துடன் இரண்டு யானைகளுக்கு நடுவில் வாகை மலர் பொறிக்கப்பட்டது போல் கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது விஜய் அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியானது தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கொடிக்கு வந்த சிக்கல் :
தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சி கொடியில் யானை இடம்பெற்றுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் யானை சின்னமானது பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆனந்தன் தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி யானை சின்னத்தை எந்த வொரு வடிவத்திலும் பயன்படுத்தக்கூடாது என்றும்,
உடனடியாக யானை உருவத்தை கட்சி கொடியில் இருந்து அகற்ற வேண்டும். மேலும் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
‘தமிழன் கொடி தலைவன் கொடி’ – தமிழக வெற்றிக்கழகம் கட்சி பாடலில் இடம்பெற்ற வரிகள் !
வாகை மலர் சர்ச்சை :
இதனை தொடர்ந்து விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள வாகை மலர் வெற்றி வாகை அல்ல. மேலும் பச்சை மற்றும் வெள்ளை நிற பூக்களை கொண்டதே தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் வெற்றியை குறிக்கும் வாகை மலர்.
இதனை தொடர்ந்து தவெக கொடியில் உள்ள மலர் துங்கு மூஞ்சி வாகை என அழைக்கப்படும் காட்டு வாகை மலராகும்.
இவ்வாறு தொடர்ந்து விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளவைகல் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.